பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று (பிப்ரவரி 26) முதல் விண்ணப்பிக்கலாம்






பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத தனித்தேர்வர்கள் இன்று (பிப்ரவரி 26)  முதல் விண்ணப்பிக்கலாம். இதற்குத் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

’’நடைபெறவுள்ள மே 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதித் தேர்ச்சி பெற்ற / பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்

மே 2021, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் விரும்பும் தனித் தேர்வர்கள், 26.02.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 06.03.2021 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறைசேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினைப் பதிவு செய்துகொள்ளலாம்.

தட்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்

மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 08.03.2021 மற்றும் 09.03.2021 ஆகிய இரு நாட்களில் அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- சிறப்புக் கட்டணமாகச் செலுத்தி ஆன்லைனில் தட்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவுசெய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ளலாம்’’.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments