வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு விமான நிலையத்தில் கட்டணமின்றி கொரோனா பரிசோதனை செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு விமான நிலையத்தில் கட்டணமின்றி கொரோனா பரிசோதனை செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை.
கொரானா தடுப்பு நடவடிக்கையாக விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு கொரானா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்கள்  குறிப்பாக‌ வளைகுடா  நாடுகளில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள் .

தற்போது உள்ள சூழலில் பலர் வேலை இழப்பு மற்றும் பல்வேறு இக்கட்டான சூழலில் தாயகம் திரும்புகிறார்கள். இந்நிலையில் ஏற்கனவே புறப்படும் நாட்டில் கட்டணம் செலுத்தி கொரானா பரிசோதனை செய்து வந்த நிலையில் மீண்டும் கொரானா பரிசோதனைக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ 3 ஆயிரம்  செலுத்துவது அவர்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்குவதாக உள்ளது.

எனவே, அவர்களின் நலன் கருதி தமிழக அரசு தமிழக விமான நிலையங்களில் கொரானா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments