அறந்தாங்கியில் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்.!



அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை இணைந்து பல்துறை மருத்துவ முகாமை அறந்தாங்கி அறந்தாங்கி டிஇஎல்சி பள்ளியில் நடைபெற்றது.

மருத்துவ முகாமை திசைகள் அமைப்பின் தலைவர் Dr.தெட்சிணாமூர்த்தி துவங்கி வைத்தார். ரோட்டரி மாவட்டம் 3000-இன் துணை ஆளுநர் Rtn.கவிதார்த்திக், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி தலைவர் Rtn.சீனிவாசன், பல்மருத்துவர் Dr.ரிஸ்வானா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  தினசகள் அமைப்பின் பொருளாளர் திரு.முகமது முபாரக், ஒருங்கிணைப்பாளர்கள் திரு புகழேந்தி, திரு.அண்ணாத்துரை, முத்து மீனாட்சி மருத்துவமனையைச் சேர்ந்த திரு.கணேசன் உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

முத்து மீனாட்சி மருத்துவமனையைச் சேர்ந்த இதய நோய் நிபுணர் Dr.மனோஜ், எலும்பு மூட்டு நிபுணர் Dr.சிரில் ஜோன்ஸ், கண்நோய் மருத்துவர் Dr.தையல்நாயகி, பல்மருத்துவர் Dr.ராயிசா பர்வீன் ஆகியோர் கலந்துகொண்டு 700 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் ECHO, ECG, இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முத்து மீனாட்சி மருத்துவமனையும், அறந்தாங்கி திசைகள் அமைப்பும் இணைந்து நடத்திய இம்முகாம் ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதகமாக அமைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments