கோபாலப்பட்டிணம் கடற்கரையிலிருந்து கண்ணுக்கு விருந்தளிக்கும் சூரிய உதயமான காட்சி.!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள  எழில்மிகு ஆழகு  கடற்கரை கிரமமான கோபாலப்பட்டிணத்தில் தினமும் அதிகாலை சுமார் 6 மணியளவில் கிழக்கே வங்க கடலில் சூரியன் உதயமாகும். அப்போது கடலுக்கு அடியில் இருந்து இளம் செம்பழுப்பு நிறத்தில் சூரியன் மெல்ல மெல்ல எழும்பும் காட்சி பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இந்த அற்புத காட்சியை காண கடற்கரைக்கு சில மக்கள் அதிகாலை 5 மணியில் இருந்தே கோபாலப்பட்டிணம் கடற்கரையில்   நீண்டநேரம் காத்திருந்து சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பார்கள். சூரியன் கடலை விட்டு மேலே எழும்பும் போது கடற்கரையில் கூடி நிற்கும்  உற்சாக மிகுதியால் மக்கள் ஆரவாரம் செய்வார்கள்.

பெரும்பாலான மக்கள்  சூரியன் உதயமாகும் ரம்மியமான காட்சியை செல்போன் படம் பிடித்து செல்வார்கள். 

இப்பொழுது சூரிய உதயம்  பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக  போன்று காட்சியளிக்கிறது.

இதனால் பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக வளைத்தளங்களில்  பதிவிட்டு வருகின்றனர்.

புகைப்படம்: தங்கம் (எ) ஜெய்னுலாபுதீன்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments