மணமேல்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம்மணமேல்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காகவும், ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காகவும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 
இந்த முகாமில் கண்பார்வை குறை உடையவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் போன்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. 

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மருத்துவ பரிசோதனையும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. 

இம்முகாமில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுரேஷ், மதியரசன், முகம்மது ரபி மற்றும் மணமேல்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விஜய் ஆனந்த், முகம்மது ஜுனைத்கான், செயல்திறன் உதவியாளர் சிவக்குமார், பல்நோக்கு உதவியாளர் கோகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments