திருச்சி சரகத்தில் 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்




திருச்சி சரகத்தில் தேர்தல் விதிமுறைகளையொட்டி 20 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஐ.ஜி. ஆனி விஜயா கடந்த 25-ந்தேதி உத்தரவிட்டு உள்ளார்.

இந்த உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.கதிரவன் அரியலூர் மாவட்டம் குவாகத்திற்கும், அரியலூர் -1 போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.எம்.செந்தில் மாறன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கும், திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்திற்கும், திருச்சி சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.ரமேஷ்குமார் சோமரசம்பேட்டைக்கும், அறந்தாங்கி ஜி.எஸ். ரவீந்திரன், குன்னம் போலீஸ் நிலையத்திற்கும், ஆலங்குடி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜி. லதா கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும்,

கந்தர்வகோட்டை ஆர். சிங்காரவேல் புதுக்கோட்டை மாவட்டம் பனைய பட்டி போலீஸ் நிலையத்திற்கும், பனையபட்டி எம். பத்மா அரியலூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி. முத்துக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் போலீஸ் நிலையத்திற்கும், திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி. ஞானவேலன் கந்தர்வகோட்டைக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் டி.பாரிமன்னன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், வையம்பட்டி பி. சண்முகசுந்தரம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கும், முசிறி கண்ணதாசன் மீன்சுருட்டிக்கும், அரியலூர் மாவட்ட ஏ.எல்.ஜி.எஸ்.சி. இன்ஸ்பெக்டர் வாணி பெரம்பலூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் பிரிவிற்கும், பாடாலூர் சுகந்தி கரூர் மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், பொன்னமராவதி எஸ். கருணாகரன் முசிறிக்கும்,

கரூர் மாவட்ட ஏ.எல்.ஜி.எஸ்.சி. இன்ஸ்பெக்டர் எல். சுமதி சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கும், குவாகம் எம். ரவிச்சந்திரன் வையம்பட்டிக்கும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள எஸ். ராதாகிருஷ்ணன் அரியலூர் போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள யசோதா திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments