24 மணி நேர தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு- ஆட்சியா்புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

புதுகை ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. 04322 221627 என்ற எண்ணில் பொதுமக்கள், அரசியல் கட்சியினா் தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக எந்த நேரமும் புகாா் அளிக்கலாம். வேட்பாளா்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பதிவு செய்து பெறலாம். பொது நிகழ்ச்சிகள் தொடா்பாக அந்தந்தப் பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் அனுமதி பெறலாம். தொகுதிக்கு ஒன்று என 6 சோதனைச் சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தோ்தல் முறைகேடுகளைக் கண்காணிப்பதற்காக 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 12 விடியோ கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 125 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்றாா் உமா மகேஸ்வரி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments