மெட்ரிக் ஓசை மாத இதழ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்.! தீர்மானங்கள் நிறைவேற்றம்.!!மெட்ரிக் ஓசை மாத இதழ் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கருத்தரங்கம் புதுக்கோட்டை KM மஹாலில் நடைபெற்றது.

முன்னதாக கூட்டத்தினரை செயலாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். ரமணன் தொகுத்து வழங்கினார்.

மெட்ரிக் ஓசை மாத இதழ் மற்றும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கருத்தரங்கத்திற்கு தலைவர் அசரப் அன்சாரி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சட்டப் பாதுகாப்பு இயக்குனர் யோகராஜ், செயல் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை சட்டப் பாதுகாப்பு சங்க தலைவர் மனோகர் ஜெயக்குமார் தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார். பொருளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார். கிருஷ்ணமூர்த்தி, ராஜு தமிழ்மாறன் மற்றம் அற்புத அலெக்சாண்டர் ஏற்பாடுகளை செய்தனர். இந்த கருத்தரங்கத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1- இந்த கல்வி ஆண்டின் 2020-21 ஆர்.டி.இ. 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உடனே வழங்க வேண்ம்.

2.பத்தாம் மற்றும் பதினோராம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அவசியம் நடத்த வேண்டும்.

3.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளையும் உடனே திறக்க வேண்டும்.

தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்கனவே கேட்டுக்கொண்ட தீர்மானத்தின்படி உடனே நிவாரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கருத்தரங்கில் ஸ்ரீராஜ்பள்ளி S.முத்துகருப்பன், மெர்குரி பள்ளி K.ரமணன், யேகோவாநிசி பள்ளி மெசியா சந்தோஷம், முத்துஸ்வாமி வித்யாலயாபள்ளி சக்திவேல், PSK பள்ளி கருப்பையா, செலக்ஷன் பள்ளி K.சுரேஷ்குமார், எவர்கிரீன் பள்ளி முனைவர்.E.முபாரக் அலி, முருகேஸ்வரா பள்ளி சின்னையா, யோகம் பள்ளி P.மாதவன், TSR பள்ளி சேகர், பாப்புலர் பள்ளி J.முகமது யூசுப்,  டைமண்ட் பள்ளி பஷீர், எய்ம் பள்ளி KT.கந்தசாமி, ஸ்ரீ அம்பாள் பள்ளி கற்பகவள்ளி, கிங்டம் பள்ளி இக்னேஷியஸ் ஜீசஸ், சைல்டு ஜீசஸ் பள்ளி A.லாசர், அரவிந்த் பள்ளி TS.அறம் வளர் நம்பி, ஆர்ட், சைன்ஸ் பள்ளி S.முருகேசன், விவேகானந்தா பள்ளி P.கருணாகரன், VSA பள்ளி தாஜுதீன், கலைமகள் பள்ளி K.பாண்டிசெல்வம், கலைதாரணி பள்ளி R.கலைச்செல்வி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி R.ரமணி, பாரதி பள்ளி G.கவிதா, லன்டன் லுக் பள்ளி Dr.K.கிருஷ்ணமூர்த்தி,மாருதி பள்ளி   A.ராமகிருஷ்ணன், மருதம்பள்ளி சுப.தமிழ்மாறன், நேரு பள்ளி S.ரெங்கசாமி, ஸ்ரீ கிருஷ்ணாபள்ளி S.ராகவன், மதர் தெரசா பள்ளி TA.அற்புத அலெக்ஸாண்டர், ஸ்ரீ மீனாட்சி S.ராச, திருச்சி SRV.வித்யாலயா பள்ளி V.செல்வம், மண்டல செயலாளர் தூத்துக்குடி ஜமீன் சாலமோன், ஏர்வாடி எலைட் மெட்ரிக்பள்ளி ஜின்னா, கன்னியாகுமரி ஆக்ஸ்போர்டு மெட்ரிக்பள்ளி அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments