ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் நிஸ்வான் மதரஸாவில் கடற்கரை பகுதியில் உள்ள ஆலிமா ஆசிரியைகளுக்கான கற்ப்பிக்கும் திறன் மேம்பாடு விளக்க கூட்டம்.!!ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் நிஸ்வான் மதரஸாவில் கடற்கறை பகுதியில் உள்ள ஆலிமா ஆசிரியைகளுக்கான கற்ப்பிக்கும் திறன் மேம்பாடு விளக்க கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகில் உள்ள ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் நிஸ்வான் மதரஸாவில் 27/02/2021 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மக்ரிபு தொழுகை வரை ஆலிமா, ஆசிரியைகளுக்கான ஒரு நாள் கற்பிக்கும் திறன் மேம்பாடு விளக்க கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மௌலானா மௌலவி காரி M.J.முகமது மைதீன் தாவூதி (தலைமை ஆசிரியர் ரஹீமா பரக்கத் மதரஸா ஏம்பக்கோட்டை) தொகுத்து வழங்க, மௌலானா மௌலவி முஜாஹித் முனீரி (ஆசிரியர் ரஹீமா பரக்கத் ஏம்பக்கோட்டை) கிராஅத் ஓதி, மௌலானா மௌலவி ரபீக் ஹஜரத் ரியாஜி (இமாம் ஜும்ஆ பள்ளிவாசல்  ஏம்பக்கோட்டை) துவக்கவுரை நிகழ்த்தினார். மக்தப் மதரஸா வரலாறு மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மத்தியில் உண்டான உளவியல் (மனோதத்துவம்) என்ற தலைப்பில் மௌலானா மௌலவி சல்மான் யூசுபி தீனியாத் கிழக்கு மண்டல-1 பொருப்பாளர் அய்யம்பேட்டை அவர்களும், பாடத்திட்டம் அமைப்பு முறை என்ற தலைப்பில் மௌலானா மௌலவி தௌபீக் ஹஸனி (பெரம்பலூர், அரியலூர் மாவட்ட தீனியாத் ஆய்வாளர்) அவர்களும், பாடத்திட்டம் என்ற தலைப்பில் மௌலானா மௌலவி ரபீஸ்கான் முனீரி புதுக்கோட்டை மாவட்ட தீனியாத் ஆய்வாளர் அவர்களும், பாடத்திட்டம் கற்பிக்கும் முறை என்ற தலைப்பிலும் தஜ்வீத் குர்ஆன் என்ற தலைப்பில் மௌலானா மௌலவி நைனார் முகமது யூசுபி தீனியாத் தமிழ்நாடு கிழக்கு மண்டலம்-2 பொருப்பாளர் அய்யம்பேட்டை அவர்களும் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி முடிவில் மௌலானா மௌலவி முப்தி சமீர் ஹஜரத் அவர்கள் (பேராசிரியர் அல்ஹுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கட்டுமாவடி) அவர்களின் துஆவுடன் முடிவடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் மக்தப் மதரஸா & ரஹீமா பரக்கத் நிஸ்வான் மதரஸா & ரஹீமா பரக்கத் கல்வி அறக்கட்டளை செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கட்டுமாவடி, அம்மாபட்டிணம், கிருஷ்ணாஜிபட்டிணம், கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், கோபாலப்பட்டிணம், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டிணம், அரசநகரிபட்டிணம் போன்ற பகுதியிருந்து 80-க்கும் மேற்பட்ட மதரஸா ஆலிமா ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments