பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி



தொண்டி அருகே பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. கிராமத் தலைவர் ஆறுமுகம், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் பழனியாண்டி முன்னிலையில் நடைபெற்ற பாய்மர படகுப் போட்டியில் 24 பைபர் படகுகள் கலந்து கொண்டன. பாய்மரப் படகுகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு காற்றின் வேகத்திற்கு ஏற்றார்போல் சென்று இலக்கை அடைந்தன. 

இதில் முதல் பரிசு ரூ. 30 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த கருப்பையா ரத்தினவேல்,

2-வது பரிசு ரூ. 25 ஆயிரம் தொண்டி புதுக்குடி நடராஜன், 

3-ம் பரிசு ரூ. 20 ஆயிரம் நம்புதாளை ஆறுமுகபடை, 

4-வது பரிசு ரூ.15 ஆயிரம் தொண்டி புதுக்குடி இளஞ்சிங்கம், 

5-வது பரிசு ரூ.10 ஆயிரம் கோட்டைப்பட்டினம் புதுக்குடி அணியும் பெற்றன.

இப்படகு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பாசிபட்டினம் கடற்கரையில் குவிந்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பாசிபட்டினம் கிராமத்தார்கள் மற்றும் பாசை வெண்புறா குழுவினர் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments