பிச்சைக்காரரையும் விடமாட்டிங்களா?: புதுக்கோட்டையில் கோவில் வாசலில் பிச்சை எடுக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி.!!புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் யாசகம் பெற பிச்சைக்காரர்களிடம் பெண் ஒருவர் லஞ்சம் பெற்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை கீழராஜா வீதி அருகே உள்ள சாந்தநாதர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்த பெற்றதாகும். இந்த கோவிலில் தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். 

அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தொழில் செய்யும் புரோகிதர்களிடமும் தலா 1,600 ரூபாய் அவர் வாங்கியிருக்கிறார். இதை தொடர்ந்து, பிச்சைக்காரர்கள் அளித்த தகவலை வைத்து அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இந்திராணியிடம் இனி பணம் வசூலிக்கக்கூடாது என்று மட்டும் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி கொண்டு அவரை போலீசார் திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பலராலும் அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்தும் படி, புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருக்கிறார். 

தமிழகத்தில் அனைத்து தொழில்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் பிச்சைக்காரரிடமே லஞ்சம் பெற்ற நிகழ்வானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments