சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த வடநாட்டைச் சேர்ந்த நபருக்கு மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.!!!புதுக்கோட்டை கீரனூரில் மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குஜராத்தை சேர்ந்த வாலிபருக்கு மரண தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே  குஜராத் மாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்ற நபர் கடந்த 2019-ம் ஆண்டு மனநலம் குன்றிய சிறுவனை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தார்.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட போலீசார் டேனிஷ் படேல் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நீதிபதி சத்யா தலைமையில் விசாரணைக்கு வந்தது.
 
வழக்கை விசாரித்த நீதிபதி, மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் டேனீஷ் படேலுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். டேனிஷ் படேல் என்பவருக்கு 3 பிரிவுகளின் கீழ் 3 மரண தண்டனையும் ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments