நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் மாதாந்திர ஊராட்சி மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த வார்டு உறுப்பினர்கள்.!நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படாததை கண்டித்து 4 வார்டு உறுப்பினர்கள் மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் தலைவர் சீதாலட்சுமி தலைமையில் கடந்த 25.02.2021 அன்று நடைபெற்றது. அதில், பங்கேற்ற வார்டு உறுப்பினர்கள், 'ஊராட்சி தேர்தல் முடிந்து பொறுப்பேற்றதில் இருந்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று 5-வது வார்டு உறுப்பினர் ரஜபு நிஷா, 6-வது வார்டு பெனாசிர் பேகம், 7-வது வார்டு சாதிக் பாட்சா, 12-வது வார்டு பிரேமா உள்ளிட்ட 4 பேரும் வெளிநடப்பு செய்தனர்.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், 8 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல்:சாதிக் பாட்சா, 7-வது வார்டு உறுப்பினர், கோபாலப்பட்டிணம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சி, ஆவுடையார்கோவில் ஒன்றியம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments