அறந்தாங்கி அருகே சத்துணவு முட்டையில் செத்த கோழிக்குஞ்சு இருந்ததால் பரபரப்புபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆயிங்குடி அரசு நடுநிலை பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம்(ஜனவரி) 18-ந் தேதி முட்டை வழங்கப்பட்டது.

 அதே நாளில் வல்லவாரி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சத்துணவு முட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆயிங்குடி அரசு பள்ளியில் ஒரு மாணவனுக்கு வழங்கப்பட்ட முட்டையை ஜனவரி 30 அன்று சனிக்கிழமை வீட்டில் உள்ளவர்கள் அவித்து உடைத்தபோது அதில், செத்த கோழிக்குஞ்சு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவனின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆயிங்குடி சத்துணவு அமைப்பாளரிடம் கேட்டபோது, கடந்த மாதம் 18-ந் தேதி முட்டை வழங்கப்பட்டது. யாரும் எந்த குறையும் சொல்லவில்லை. முட்டைக்குள் செத்த கோழிக்குஞ்சு இருந்தது என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. நம்பகத்தன்மை இல்லாதது என கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments