கல்யாணராமனை கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.!புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் முகம்மது நபியை பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாணராமன் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அனைத்து முஸ்லிம் அமைப்பினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக அனைவரும் பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாணராமன் என்பவருக்கு எதிராக பாதகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து கோஷங்கள் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments