புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் வெளியீடு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் விவரம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி கருணாகரன் (செல்போன் எண்-94421 38570), விராலிமலை தொகுதிக்கு இலுப்பூர் உதவி கலெக்டர் டெய்சிக்குமார் (94454 61803), புதுக்கோட்டை தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி (94450 00468)யும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல திருமயம் தொகுதிக்கு சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கிருஷ்ணன் (94454 61746), ஆலங்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி (94450 00311), அறந்தாங்கி தொகுதிக்கு அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் (94450 00469) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக அந்தபகுதி தாசில்தார்கள் உள்பட 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக அந்தந்த தொகுதிக்குட்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments