புதுக்கோட்டையை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.!புதுக்கோட்டையை சேர்ந்தவர் சன்னிதி என்ற சன்னாசி பாண்டியன் (வயது 31). இவரை வழிப்பறி வழக்கில் திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கஞ்சா கடத்தல் வழக்கில் சித்ராவை (55) திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்தனர். சன்னாசி பாண்டியன், சித்ரா ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments