மணமேல்குடி அருகே விச்சூர் குணபதிமங்கலம் கிராமத்தில் வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் திருட்டு



மணமேல்குடி அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மணமேல்குடியை அடுத்த விச்சூர் குணபதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி அஞ்சம்மாள் (வயது 60). கருப்பையா ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அஞ்சம்மாள் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் அதே பகுதியில் வசிக்கும் தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் காலை வீடு திரும்பினார். 
அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் மேற்கூரை (ஓடு) பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்த போது, 7 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. 

இது குறித்து அஞ்சம்மாள் மணமேல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments