கிருஷ்ணாஜிபட்டினத்தில் அம்மா மினி கிளினிக் திறப்புமணமேல்குடி ஒன்றியம் கிருஷ்ணாஜிபட்டின ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா கடந்த 26.02.2021 அன்று நடைபெற்றது.

கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சியில் மருத்துவமனை அமைக்க வேண்டும் என கிருஷ்ணாஜிப்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது. 

இந்நிலையில் அம்மா மினி கிளினிக் தமிழகத்தில் திறக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்ததையடுத்து, பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனையடுத்து மினி கிளினிக் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கடந்த 28.02.2021 அன்று கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவா் எம்.எல்.எஸ்.சாகுல் ஹமீது தலைமை வகித்து, மினி கிளினிக்கை திறந்துவைத்தாா். 

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கிருஷ்ணாஜிபட்டினம் கிராமத்தினர், கிருஷ்ணாஜிப்பட்டினம் ATG குழுமம் நிர்வாகிகள், இஸ்லாமிய பொதுநல இளைஞர் பேரவை நிர்வாகிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தகவல்: அஹமது சலீம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments