கட்டுமாவடியில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1.22 லட்சம் பணம் பறிமுதல்.! தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை.!!கட்டுமாவடி சோதனைச் சாவடியில், புதன்கிழமை மாலை பறக்கும்படை அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது மீமிசலிலிருந்து திருச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த தையாராம் (26), மீட்டாராம் (40) ஆகியோா் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.22 லட்சத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து இத்தொகை அறந்தாங்கி சாா் ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments