“சார்..வைக்கோல் வாங்கப் போறேன்” ஆவணம் இல்லாததால் ரூ.86,500 பணத்தை பறிமுதல்செய்த அதிகாரிகள்




வைக்கோல் வாங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்துள்ள ராஜேந்திர பட்டினம் பகுதியில், சமூக நலத்துறை வட்டாட்சியர் செந்தில் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து, ஜெயங்கொண்டத்தில் மாடுகளுக்கு தீவனமாக வழங்கப்படும் வைக்கோல் வாங்குவதற்காக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தருமன் என்பவர் வைத்திருந்த 86,500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உரிய ஆவணம் இன்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டதால், அப்பணத்தை விருத்தாச்சலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments