திருச்சி, புதுக்கோட்டையில் 100 ரிக் லாரிகள் வேலைநிறுத்தம்!

மூலப்பொருள்கள் விலையேற்றத்தை எதிர்த்து திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ரிக் தொழிலுக்கு அடிப்படை தேவையான பிவிசி பைப் விலை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. இதர மூலப்பொருள்கள் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு நல்ல முறையில் ஊதியம் வழங்க இயலவில்லை. ரிக் உரிமையாளர்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, விலையேற்றத்தை எதிர்த்து ரிக் உரிமையாளர்கள் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, மன்னார்புரம் அருகே ரிக் லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments