பரபரப்பான அரசியல் சூழலில் சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்






பரபரப்பான அரசியல் சூழலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (பிப்.04) சென்னையில் உள்ள கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. 

மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். 

மேலும், கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில வி.எம்.அபுதாஹிர், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், அஹமது நவவி, வழ.சபியா நிஜாம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து முன்தயாரிப்புகள் குறித்தும் தொகுதி வாரியாக விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற சக்திகள்  திரள்வதில் ஏற்பட்டுள்ள குறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், தேர்தல் போட்டியில் உள்ள அணிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேவை தொடர்பான அழைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு, அதனை அனுசரித்து எதிர்வரும் சட்டமன்றத்தில்  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் தேர்தல் போட்டி தொடர்பான அனைத்து முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கட்சியின் மாநில தலைமைக்கு மாநில செயற்குழுவால் ஒருமனதாக வழங்கப்பட்டது. 

மிகவும் உற்சாகமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை களத்தில் நின்று வீரியமாக, சிறப்பாக செயலாற்ற தயாராக இருப்பதாக செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தெரிவிக்கப்பட்டது.

-நிஜாம் முகைதீன்
மாநில பொதுச்செயலாளர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments