ஆவுடையார் கோவில் அருகே ஏரியில் கார் கவிழ்ந்தது




ஆவுடையோர்கோவில் அருகே உள்ள துஞ்சனூர் கிராமத்தில் உள்ள ஏரி அருகே அபாயகரமாக வளைவு உள்ளது. இந்நிலையில் நேற்று கரூர் கிராமத்திலிருந்து ஒக்கூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வளைவில் கவிழ்ந்து ஏரியில் விழுந்தது.

இதில் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இதையடுத்து இந்த வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments