அறந்தாங்கியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்புஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள மத்திய துணை ராணுவத்தினர் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கொடி அணிவகுப்பை சப்-கலெக்டர் ஆனந்த்மோகன் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை-காரைக்குடி சந்திப்பில் உள்ள சோதனை சாவடியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு பெரியகடை வீதி, கட்டுமாவடி முக்கம் வழியாக வந்து அண்ணாசிலை அருகே நிறைவு பெற்றது. 

இந்த அணிவகுப்பில் மத்திய பாதுகாப்பு மற்றும் துணை ராணுவ படையினர், அறந்தாங்கி போலீசார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments