ஜெகதாப்பட்டினத்தில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல்



ஜெகதாப்பட்டினத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜெகதாப்பட்டினம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வேளாண் துணை இயக்குனர் வனஜாதேவி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.1½ லட்சம் இருந்தது. 

அந்த பணம் குறித்து அந்த வாகனத்தில் வந்த கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த சமீர் (45) மற்றும் டிரைவர் பைசல் (39) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் காரைக்கால் பகுதிக்கு மீன் வாங்க கொண்டு செல்வதாக தெரிவித்தனர். 

ஆனால், அதற்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments