மீமிசலில் சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி...



தமிழக சட்டமன்ற தேர்தல் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்.

மீமிசல் பகுதியில் துவங்கி ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம், மணமேல்குடி, மும்பாலை, கிருஷ்ணாஜி பட்டினம் போன்ற பகுதிகள் வழியாக சென்று கட்டுமாவடியில் பேரணி நிறைவு பெற்றது. 

பேரணியில் மணமேல்குடி தாசில்தார் ஜமுனா, ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையை சேர்ந்த அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments