கிருஷ்ணாஜிபட்டினத்தில் இளம் புயல் அணியினர் சார்பில் நடைபெற்ற சிறுவர்களுக்கான கபடி போட்டி.!புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகேயுள்ள கிருஷ்ணாஜிபட்டினத்தில் இளம் புயல் அணியினர் சார்பில் கபடி போட்டிகள் நேற்று முன்தினம் 7.03.2021 நடைபெற்றன. கமிட்டியாளர்கள் போட்டியை தொடங்கி வைத்தானர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 5 அணிகள் பங்கேற்றன.

இதில் முதல் பரிசை கிருஷ்ணாஜிபட்டினம் கமிட்டி A அணியும், 2-வது பரிசை கிருஷ்ணாஜிபட்டினம் கமிட்டி B அணியும், 3-வது பரிசை புதுக்குடி அணியும், 4-வது பரிசை கிருஷ்ணாஜிபட்டினம் கடல் பறவை அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

கமிட்டி அணியினர் பெற்ற இரண்டு சுழற்கோப்பையையும் கிருஷ்ணாஜிபட்டினம் இஸ்லாமிய பொதுநல இளைஞர் பேரவைக்கு நினைவு பரிசாக வழங்கினர். 

தகவல்: அஹமது சலீம், கிருஷ்ணாஜிபட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments