புதுக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்



வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி புதுக்கோட்டையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி, துணை ராணுவ படையினர் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக ஓடிய நிகழ்வு காண்போரை கவர்ந்தது.

சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை நடத்திடவும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசு பொது வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த வாக்காளர் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 92 துணை ராணுவப் படையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.மாணவர்களோடு இணைந்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்டோரும் ஓடிய நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இந்த மராத்தான் ஓட்டம் பழைய பேருந்து நிலையம் கீழராஜவீதி, பிருந்தாவனம்,வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி,புதிய பேருந்து நிலையம் சாலை வழியாக சென்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் ஆட்சியர், எஸ்பி, துணை ராணுவப் படையினர் மாணவ-மாணவிகள் என ஒருசேர சாலைகள் ஓடிய நிகழ்வு காண்போரை கவர்ந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments