ஆலங்குடி அருகே வீட்டு வேலைக்கு வர மறுத்ததால் பெண்ணின் மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் என போலி திருமண அழைப்பிதழ் அச்சடித்து வினியோகம்



வீட்டு வேலைக்கு வர மறுத்ததால் பெண்ணின் மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் என பத்திரிகை அச்சடித்து வினியோகம் செய்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நம்பன் பட்டியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 42). இவர், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி ஊராட்சி செயலாளராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த விதவைப்பெண் முத்துமணி. இவர், 6 மாத காலமாக சுந்தரமூர்த்தி வீட்டுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர், சுந்தரமூர்த்தி வீட்டுக்கு வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டார். ஆனால் சுந்தரமூர்த்தி, முத்துமணியை வேலைக்கு வரச்சொல்லி தொந்தரவு செய்துள்ளார். தனது மகள் வீட்டில் தனியாக இருக்கிறாள். இதனால் இனிமேல் வேலைக்கு வர முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, முத்துமணியின் 17 வயது மகளுக்கும் வேறு ஒரு பையனுக்கும் திருமணம் என பத்திரிக்கை அடித்து வினியோகம் செய்துள்ளார். தனது மகளுக்கு திருமணம் என பத்திரிகை அடித்து அவமானப்படுத்திய சுந்தரமூர்த்தி மீது ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் முத்துமணி புகார் கொடுத்தார். அதில், போலியாக அச்சடித்த திருமண பத்திரிகை ஒன்றை சுந்தரமூர்த்தி தனது வீட்டில் வைத்துவிட்டு சென்றதாகவும், வீட்டில் இருந்த ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தியை கைது செய்து ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments