கோபாலப்பட்டிணத்தில் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது!



புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மகன் முகம்மது அலி ஜின்னா (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து அந்தபெண் இதுகுறித்து குடும்பத்தாரிடமும், ஊர் முக்கியஸ்தர்களிடம் கூற போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் அந்த வாலிபர் நீ அவ்வாறு செய்தால், தவறானவள் என்று ஊர் மக்களிடம் கூறி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இதனால் மனமுடைந்த அந்த பெண் வீட்டிலிருந்த கொசு மருந்து திரவத்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதையடுத்து அந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், முகமது அலி ஜின்னாவை மீமிசல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments