கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் உயிரிழப்பு வழக்கு கோட்டைப்பட்டினம் சட்டம் ஒழுங்கு காவல்துறைக்கு மாற்றம்ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஜனவரி மாதம் 18-ந்தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த மெர்சியா, உச்சிப்புளியை சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார், மண்டபத்தை சேர்ந்த சாம் ஆகிய 4 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் கப்பல் மோதியதில் 4 மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து திருப்புனவாசல் கடலோர காவல் குழும போலீசார் 4 மீனவர்கள் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 4 பேர் தொடர்பான வழக்கு திருப்புனவாசல் கடலோர காவல் குழுமத்தில் இருந்து கோட்டைப்பட்டினம் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மீனவர் ஆரோக்கியசேசு கொடுத்த புகாரின் பேரில் தமிழக மீனவர்கள் 4 பேரும் மாயம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments