புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை cVIGIL செயலி'யில் தெரிவிக்கலாம்...சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக தனிநபரோ அல்லது அரசியல் கட்சி பிரமுகர்களோ செயல்பட்டால், பொதுமக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரிடம் தங்கள் புகார்களை cVIGIL என்ற செயலி வாயிலாக தெரிவிக்கலாம்.

மேற்காணும் செயலியில் புகைப்படம், ஆடியோ, மற்றும் வீடியோ வாயிலாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். முதலில் தங்களது செல்போனில் பிளே ஸ்டோரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட cVIGIL செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

அதில் தங்களது செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். பின்னர் செல்போனுக்கு வரும் நான்கு இலக்க ரகசிய குறியீடு எண்ணை பதிவிடவும். இறுதியாக தங்களது புகார்களை மேற்கண்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு முறையில் பதிவு செய்திடலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments