ஆவுடையார்கோவிலில் மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்!!ஆவுடையார்கோவில் திருப்பெருந்துறை ஊராட்சியில் மகளிர் திட்டம் சார்பில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருப்பெருந்துறை ஊராட்சி தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதில், மகளிர் திட்டவட்டார இயக்க மேலாளர் ஜெயந்தி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி துணைத்தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தினர், வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பின்னர், இதுதொடர்பான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments