தேன்கூடு அமைப்பின் சிறந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கான பாராட்டு சான்றிதழை பெற்ற செந்தலை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.ரகுமத்துல்லா!கோயம்புத்தூர் தேன்கூடு அமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

கோயம்புத்தூர் தேன்கூடு அமைப்பு சார்பில் சமூகச் சேவையைப் பாராட்டி குறிப்பாக கோவிட் -19 பெருந்தொற்று தடுப்புப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதைப் பாராட்டி கடந்த 11.03.2021 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கோவை மாவட்டம், காரமடை அருகில் உள்ள ஒன்னிபாளையம் என்ற கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் மைதானத்தில் சிறந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இவ் விழாவில் பாராட்டு விருது மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், செந்தலைவயல் ஊராட்சி மன்றத் தலைவர் திரு ரகுமத்துல்லா அவர்களுக்கு சமூகச் சேவையைப் பாராட்டி குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று தடுப்புப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதைப் போற்றும் வகையில் தேன்கூடு அமைப்பினர் பாராட்டு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments