மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!



தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணிக் கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

இதனிடையே நேற்று 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில்,

கீழ்வேளூர் – முன்னாள் எம்.எல்.ஏ. நாகை மாலி

திருப்பரங்குன்றம் – எஸ்.கே. பொன்னுத்தாய்

அரூர் – ஏ. குமார்

திண்டுக்கல் – எம். பாண்டி

கோவில்பட்டி – கே. சீனிவாசன்

கந்தர்வகோட்டை- எம்.சின்னதுரை

ஆகியோர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments