மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும்: தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

இந்தநிலையில், வேட்பாளர்கள் 10 பேரின் பட்டியலை அந்தக் கட்சியின் தலைவர் கே.எம்.சரீப், திருச்சியில் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியது:

எங்களுக்கென தனியாக தேர்தல் அறிக்கை இல்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையே எங்கள் தேர்தல் அறிக்கை. தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் போட்டியிட்டாலும், 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வெற்றிக்குப் பாடுபடுவோம் என்றார்.

வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

கந்தர்வகோட்டை (தனி)- கேஆர்எம்.ஆதிதிராவிடர் (பொதுச் செயலாளர்)

சங்கரன்கோவில் (தனி)- ஆர்.பிரபு (தென்காசி மாவட்டப் பொருளாளர்)

ஒட்டன்சத்திரம்- ஏ.அப்துல் ஹாதி (மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்)

வேடசந்தூர்- சையது முஸ்தபா (திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்)

மானாமதுரை (தனி)- சிவசங்கரி பரமசிவம்

விழுப்புரம்- க.தாஸ்

திருப்பத்தூர்- பி.ரபீக் அகம்மது

அறந்தாங்கி- கரூர் சேக் முகம்மது

திருச்சி மேற்கு- எம்.அபூபக்கர் சித்திக்.

பூம்புகார்- ஹெச்.மெகராஜ் தீன் (மாநில துணைத் தலைவர்).

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments