ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு




தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் ஓவைசியின் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ஒவைசி கட்சிக்கு கூட்டணி ஏற்பட்டு, அக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதன்படி வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி வாணியம்பாடி - வக்கீல் அஹமத், 

சங்கராபுரம் - முஜிபுர் ரஹ்மான், 

கிருஷ்ணகிரி - அமீனுல்லா 

ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments