அமமுகவிற்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்று ,.திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு - இந்திய தேசிய லீக் கட்சி அறிவிப்பு


தேமுதிக அமமுக உடன் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டதால் இந்திய தேசிய லீக் கட்சி அமமுக க்கு இதுவரை கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெறுகிறது .

CAA க்கு தொடர்ந்து ஆதரித்து பாஜக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக வை அமமுக கூட்டணியில் இணைத்தது முஸ்லீம்களிடம் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஆகையால் இந்திய தேசிய லீக் கட்சி மாநில நிர்வாகிகளின் ஆலோசனையோடும் , ஒப்புதலோடும் இதுவரை அமமுக வுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற முடிவு எடுத்து உள்ளோம் அதே நேரத்தில் மதசார்பற்ற கூட்டணியான திமுக கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு அளிக்கிறது

ஆர் கே நகர் இடைத்தேர்தல் முதல் கொண்டு இந்திய தேசிய லீக் கட்சி திரு டிடிவி தினகரன் அவர்களோடு களமாடி வருகின்றது கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கூட அமமுகவுக்கு முழு ஆதரவு கொடுத்து அரசியல் களம் கண்டது குறிப்பிடத்தக்கது 

இப்போது உள்ள சூழலில் மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே இந்தியாவில் பரவி வரும் பாசிசத்தையும்  , தமிழ் நாட்டில் பரவ இருக்கும் பாசிசத்தையும்  காப்பாற்ற முடியும் என மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூறியதால் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு 

தமிழகம் முழுவதும் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக களமாடுவார்கள் என்பதனை தெரிவித்து கொள்கிறோம் 

அன்புடன் 
தடா ஜெ அப்துல் ரஹிம் 
இந்திய தேசிய லீக் கட்சி 
மாநில தலைவர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments