குளத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் காயம்

கறம்பக்குடி அருகே குளத்தில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். கார் கவிழ்ந்தது கறம்பக்குடி அருகே உள்ள நாங்கியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாயுமானவன் (வயது 25). இவர் தனது காரில் நண்பர்கள் 2 பேருடன் திருவோணத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர்.


 கறம்பக்குடி புதுக்குளம் அருகே சென்றபோது, கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடியது. அப்போது சாலையோரத்தில்  நிறுத்தப்பட்டிருந்த 2 சரக்குவேன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றின் மீது மோதி புதுக்குளத்திற்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. மேலும் சரக்குவேன், மோட்டார் சைக்கிள்களும் குளத்திற்குள் கவிழ்ந்தன.
3 பேர் காயம்
இந்த விபத்தில் காரில் இருந்த தாயுமானவன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments