அறந்தாங்கியில் வேட்பாளர் ஹூமாயூனை ஆதரித்து சீமான் பிரச்சாரம்
தமிழ் மொழியையும், தமிழர்களையும் அழிக்கும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் ஹூமாயூனை ஆதரித்து அறந்தாங்கியில் நேற்று அவர் பேசியது:

தமிழ் மொழியையும், தமிழர்களையும் அழிக்கும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் தனியார்மயம், தாராளமயம், இனம், மொழி அழிப்பு போன்ற கொள்கைகளில் ஒன்றுபட்டு தான் இருக்கின்றன. பாஜகவை ஒழித்துவிட்டாலே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அமைந்துவிடும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதற்காக, செயற்கை முறையில் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.

பசிக்கிறது எனக் கேட்டு வருவோருக்கு சோறு போடுவதைப் போன்று, தேர்தலில் எங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தை சொர்க்க பூமியாக மாற்றுகிறோம்.


ஏற்கெனவே ஆட்சிக்கு வந்து ஒன்றும் செய்யாத கட்சியினருக்கு மீண்டும் ஏன் வாக்களிக்க வேண்டும்?. கடந்தகால காயங்கள், எதிர்கால சிந்தனைகள் இல்லாமல், நிகழ்கால தேவைகளை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் வகையில் ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் தள்ளப்பட்டு இருப்பதால், அவர்கள் இலவசங்களை எதிர்பார்க்கின்றனர் என்றார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments