கோபாலப்பட்டிணத்தில் அடிப்படை தேவையை நிறைவேற்ற கோரி அலையும் மக்கள்.! கண்டுகொள்ளாத நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம்!!கோபாலப்பட்டிணத்தில் பல இடங்களில் எரியாத தெருவிளக்கு சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பல இடங்களில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாகவும் ஒரு சில இடங்களில் 15 நாட்களுக்கு மேலாக எரியாமல் உள்ளது. இது சம்மந்தமாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை புகார் தெரிவித்தும் இது நாள் வரை தெரு விளக்கு எரிய ஊராட்சி மன்ற நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.

குறிப்பாக இது சம்மந்தமாக அவுலியா நகர் 2-வது வார்டு உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றார்.மேலும் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மேலும் ஒவ்வொரு முறையும் ஊராட்சி நிர்வாகத்திடம் எப்பொழுது சரி செய்யப்படும் என்று கேள்வி எழுப்பும் பொழுது நாளை சரி செய்யப்படும் என ஒவ்வொரு முறையும் நாளை, நாளை என சொல்லி காலம் தாழ்த்தி வருகின்றனர் என கொதிப்படைந்து உள்ளனர்.

எனவே ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 15.03.2021 அன்று 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்ஷா அடிப்படை வசதியான குடிநீர் பைப் வசதி மற்றும் எரியாத தெருவிளக்கை சரி செய்ய வேண்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments