உலக முழுவதும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முடங்கியது! அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயங்க தொடங்கியது!!



உலகின் பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப் மார்ச்.19 இரவு 10.30 மணியளவில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் முடங்கியது. மற்ற வலதளங்களான இஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவையும் முடங்கியதால் பயனாளர்கள் தகவல்களை அனுப்ப முடியாமல் தவித்தனர்.

இந்தியா மற்றும் உலக நாடுகளில் சுமார் 200 கோடி பேர் வாட்ஸ்அப்ஐ பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 43 நிமிடங்கள் வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் வாட்ஸ்அப் பயனாளர்கள் தகவல்களை அனுப்ப முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இது தவிர பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற வலைதளங்களும் முடங்கியது.

ஆனால், 43 நிமிட முடக்கத்திற்கு பிறகு வாட்ஸ் அப் சேவை சீரானது. இதனால் அவற்றின் பயனாளர்கள் நிம்மதி அடைந்தனர். வாட்ஸ்அப் ஐ தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் வலைதளங்களும் சீராகியது.

வாட்ஸ்அப் செயலி முடக்கம் குறித்து அமெரிக்காவில் இயங்கி வரும் அந்நிறுவனம் சார்பில் இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதையும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments