செங்கல்பட்டு: கேட்காமல் பணத்தை எடுத்ததால் திட்டிய தந்தை - மாணவன் எடுத்த விபரீத முடிவு
தந்தையின் பாக்கெட்டில் இருந்த பணத்தை கேட்காமல் எடுத்ததால் திட்டிய தந்தை தந்தை, மனமுடைந்து பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்துள்ள கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். தச்சு தொழிலாளியான இவர் வீட்டில் இருந்தபோது தனது சட்டைப் பையிலிருந்த பணத்தை கேட்காமல் எடுத்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் துரைமுருகனை (15) சுந்தரம் கண்டித்துள்ளார்.


இதனால் மனமுடைந்த மகன் துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த சுந்தரம், வீட்டிற்கு வந்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த சூனாம்பேடு காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments