புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலிபுதுக்கோட்டையில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் ஓரிரு நாட்களில் அதிகரிக்கிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது நேற்று முன்தினம் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. 

புதுக்கோட்டையில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 'டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து544 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments