ஆவுடையார்கோவில் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி
ஆவுடையார்கோவில் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியானார். கோட்டைப்பட்டினம் சதாம்நகரைச் சேர்ந்த ரவி மகன் விக்னேஷ் என்ற ராகேஷ்( 16). இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வந்தார். இவர் தனது பைக்கில் அறந்தாங்கி வந்து விட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கோட்டைப்பட்டினம் அருகே உள்ள செம்மனாம்பொட்டல் அருகே சென்றபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அறந்தாங்கி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments