நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகளிடையே கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் நீடித்து வருகிறது.. வல்லரடு நாடுகள் தொடங்கி ஏறக்குறைய பல நாடுகளையும் பதம் பார்த்த தொற்று நோய் இன்னும் வீரியம் குறையாமல் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் அறிவிக்கப்படாத 2ம்சுகாத அலை தற்போது வேகமெடுத்து வருகிறது.

இதனிடையே உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதலில் நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து முன்கள பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. அதே நேரத்தில் இணை நோய்க்கள் இருக்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசிகள் போதிய அளவுக்கு கையிருப்பு உள்ளது. எனவே தடுப்பூசி கையிருப்பு குறித்த அச்சம் தேவையற்றது” என்றார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயது தகுதி பெற்றிருப்பவர்கள் Co-Win செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். முதல் டோஸ் போட்ட4 முதல் 6 வாரங்களுக்குள் அடுத்த டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பெருமளவு கொரோனா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது. இதுவரை அதிக அளவாக நேற்று (மார்ச் 22) 32.53 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை மொத்தமாக 5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments