கட்சி பொறுப்பில் இருந்து விலகினார் அதிமுக எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி.!கட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ 'திடீர்' என விலகியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி.  தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில் கட்சிப் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ ரத்தினசபாபதி 'திடீர்' என விலகியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பதவியில் இருந்து வந்த அவர் தற்போது தனது பதவியினை ராஜிநாமா செய்துள்ளார்.

அவரது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி தற்போது அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments