வாக்குப்பதிவு, எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் தொடர்பாகவும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தேர்தல் அதிகாரி கூறியதாவது:-
மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 பறக்கும்படைகள் குழு, 3 நிலையான கண்காணிப்பு குழு மற்றும் 1 வீடியோ கண்காணிப்பு குழு என 7 குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் இயங்கி வருகின்றனர். குறிப்பாக சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய அனைத்து புகார்கள் மீதும் 24 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தலுக்கு இடையூறாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது போலீஸ் மூலம் வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றையதினம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 144 அரசு மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்ற 9 தனியார் மது விற்பனை கூடங்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஏப்ரல் 4, 5 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதியும் அரசு மதுபானக்கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்நாட்களில் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது குறித்தும் போலீசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.