கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்.!



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகாமையிலுள்ள கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் MKR ராசி திருமண மஹாலில் 27-03-2021 சனிக்கிழமை நடைபெற்றது.

என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கோபாலப்பட்டிணம் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நிர்வாக குழு தலைமையில் நடைபெற்றது. 

முகாமை மருத்துவர் S.ராமசந்திர துரை MBBS மற்றும் மருத்துவர் P.கணேசன் MBBS., அவர்கள் துவங்கி வைத்தனர்.

இம்முகாமில் 25 நபர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.

இரத்ததானம் செய்தவர்களுக்கு அறந்தாங்கி இரத்த வங்கி குழுத்தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையை பாராட்டி சான்றிதழ் வழங்கபட்டது. 

இம்முகாமில் கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் உறுப்பினர்கள் கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், மீமிசல் ஸ்கூல் பாயிஸ் கிரிக்கெட் குழு, காவல் துறை அதிகாரிகள், மருத்துவ துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இரத்ததான கொடையாளர்கள் கலந்து கொண்டனர். 









தகவல்:
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை, கோபாலப்பட்டிணம்  
ஆவுடையார்கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.


    



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments